.webp)


4-வது ஆண்டு விழா நிகழ்ச்சி
27.03.2026


சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் சாக்ரட்டீஸ் கலந்து கொண்டு இன்றைய நவீன காலத்தில் பெண்கள் புதிய வளர்ச்சியில் அறிவியல் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் அறிவுசார் உலகத்தில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிவதன் தடத்தைப் பதித்து வருகின்றனர். இன்றைய காலத்தில் கல்வி என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. கல்விதான் பெண்களுக்கு பாதுகாப்பான அரணாகவும், வாழ்வில் வெற்றி பெற உதவும் கருவியாகும் என்றார்.
கௌரவ விருந்தினராக மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியின் முதல்வர் முனைவர் இராமசுப்பையா அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் பெண்கல்வியே சிறந்தது. பெண்களால் மட்டுமே பல மாற்றங்களை உருவாக்க முடியும். தன்னம்பிக்கையுடன் இருக்கும் போதுதான் பெண்கள் அழகாக இருக்கமுடியும். மாணவிகள் பெற்றோர்களின் பயத்தை போக்கி இன்றைய வாழ்க்கை முறையை விளக்க வேண்டும். தன்னுடைய ஆசைகளை அடக்கி தன் பிள்ளைகளுக்காக உழைக்கும் தாய் தந்தையின் உழைப்பை மாணவிகள் மறந்துவிடக்கூடாது என்றார்.